நடிகர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

 
1

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

Vijayakant-Stalin

பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்றிரவு அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

vijayakant

வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்ப வேண்டுமென தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

From Around the web