கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விமல்!! குவியும் வாழ்த்துக்கள்..!! 

 
1


தமிழில் பசங்க படத்தில் அறிமுகமான நடிகர் விமல், அதை தொடர்ந்து களவாணி, வாகை சூட வா, மஞ்சப் பை, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவருடைய தாய்மாமன் மகளான அக்ஷ்யாவை விமல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். விமல் நடிப்பில் கடைசியாக வெளியான விலங்கு வெப் சீரிஸ் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தற்போது துடிக்கும் கரங்கள்’ மற்றும் ‘தெய்வ மச்சான்’ உள்ளிட்ட தனது அடுத்த படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் விமல்.

இந்நிலையில், அமெரிக்க நேஷனல் பிசினஸ் பல்கலைக்கழகம் நடிகர் விமலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"நீங்கள் எங்களிடம் சமர்ப்பித்த உங்கள் பயோடேட்டாவிலிருந்து உங்கள் சாதனைகள் மற்றும் பங்களிப்பை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களின் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. உங்கள் விண்ணப்பத்தை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு, எங்களின் கல்வி ஆலோசனைக் குழு உங்களுக்கு ‘டாக்டர் ஆஃப் ஆர்ட்ஸ் (ஹானரிஸ் காசா)’ என்ற பட்டத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. எனவே எங்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1

American nation business university (ANBU) என்ற அமெரிக்கன் யுனிவர்சிட்டி சென்னையில் உள்ள ரெசிடன்ஸி டவர்ஸ் ஹோட்டலில் வைத்து, விமலுக்கு அந்த கவுரவ டாக்டர் பட்டத்தை கொடுத்து கௌரவித்திருக்கிறது.

விமலின் மனைவி எம்பிபிஎஸ் டாக்டர் என்ற நிலையில் தற்போது விமலும் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

From Around the web