நடிகர் விஷாலை பங்கம் செய்த பிரகாஷ்ராஜ்!

 
1

முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், துப்பறிவாளன், சண்டைக்கோழி-2 என தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் சமீபத்தில் காசி சென்றிருந்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர் ட்விட்டரில், “காசி விஸ்வநாதர் கோவிலைப் புதுப்பித்ததற்காக பிரதமர் மோடியை தலைவணங்குகிறேன். கோவிலை மேம்படுத்தி அற்புதமான இடமாக மாற்றியதற்காக கடவுளின் அருள் எப்போதும் பிரதமருக்கு கிடைக்கும்” என்று புகழ்ந்ததுடன், பதிவை பிரதமர் மோடியையும் டேக் செய்திருந்தார்.

இதற்கு பிரதமர் மோடியும் ரிப்ளை செய்திருந்தார். அதில், “தங்களுக்கு காசியில் சிறப்பான அனுபவம் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையாடலை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலடித்து இன்று ஒரு ட்விட் வெளியட்டுள்ளார். நடிகர் விஷாலின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு “ஷாட்.. ஓகே. நெக்ஸ்ட்” என்று குறிப்பிட்டுள்ளார். மோடியும், விஷாலும் சிறப்பாக நடிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ள ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.


 

From Around the web