முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகர் யோகி பாபு..!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு அண்மையில் வெளியான லவ்டுடே திரைப்படத்தில் யோகிபாபுவின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திர கவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் சிலை அமைந்துள்ளது. இக்கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட்ட நிலையில், தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்வதற்காக முத்துமாலை முருகன் கோவிலுக்கு வருகை தந்தார். சஷ்டி நாளில் வருகை தந்த யோகி பாபுவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் இந்த கோவில் ஸ்வாமியின் சிலை 146அடி... அதனால் இந்த கோவில் மலேஷியாவை விட பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது