காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நடிகை தீபா...காதலனுடன் பேசிய ஆடியோ லீக்..!!

 
1

விஷாலின் துப்பறிவாளன் படத்தில்  ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்  29 வயதான நடிகை தீபா. இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவரும் இவரே..

இந்நிலையில் நடிகை தீபா, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார்,உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.   

1

இதையடுத்து, போலீசார் வீட்டில் மேற்கொண்ட சோதனையில், தீபா தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், உயிருக்கு உயிராக தாம் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் நிறைவேறாததால் உலகத்தைவிட்டு செல்வதாகவும், தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், காதலன் சிராஜுதினிடம் தீவிரமாக விசாணை நடத்தி வருகின்றனர்.

1

மேலும்,  தீபா தனது வீட்டிற்கு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கீழ் தளத்தில் இருந்து அவர் படியில் செல்வது போல இந்த காட்சிகள் உள்ளன. அதில் அவர் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். சனிக்கிழமை மாலை எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆகும் இவை. அன்று நடு இரவில்தான் தீபா தற்கொலை செய்து கொண்டார்.

தீபாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் தற்கொலைக்கு முன் சிராஜுதினிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் காதலரிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நடிகை தீபாவின் குடியிருப்பு அருகே உள்ள சிசிடிவியை கைப்பற்றி ஆய்வு செய்த போலீஸார், அவரது வீட்டிற்கு யார், யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.

நடிகை தீபாவின் காதலன் சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தை இருக்கும் நிலையில், அவர் தீபாவுடன் பழகி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்து நடிகை தீபாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
 

From Around the web