நடிகை ஹன்சிகா முதன்முறையாக தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..!! 

 
1

‘ஷக்கலக்கா பூம் பூம்’ என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கியவர் ஹன்சிகா மோட்வானி. அதே நேரத்தில் ‘தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத்’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார்.

இதையடுத்து, 2007-ம் ஆண்டு பூரி ஜெகனாத் இயக்கத்தில் வெளியான ‘தேசமுதுரு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘ஆப் கா சரூர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் 2008-ல் வெளியான ‘பிந்தாஸ்’ என்ற கன்னடப் படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்தார்.

Hansika

பின்னர், 2011-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ படத்தில் அறிமுகமான இவர், ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த 50வது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020-ல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அது லாபகரமாக நடக்கிறது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகா அவரது தொழில் பார்ட்னரான சோகேல் கதுரியா என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும், டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் இந்த திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காதலருடன் பாரிஸ் நகரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது காதலர் அவருக்கு செம ரொமான்ஸாக புரபோஸ் செய்யும் காட்சிகள் உள்பட பல காட்சிகள் உள்ளன என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்து கொள்ளப்போகும் ஹன்சிகாவுக்கு திரை உலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web