சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு சென்ற நடிகை ஹன்சிகா..!! 

 
1

டிசம்பரில் ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ள நிலையில், இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிக்க ஹன்சிகா கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். மேலும் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது.

மேலும் இந்த படம் எமோஷனல் மற்றும் ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லர் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் அடிப்படை கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் இதை முழு நீள திரைக்கதையாக மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் வகையில் மாற்றி வசனம் எழுதியுள்ளார்.

1

மேலும் பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மா.தொல்காப்பியன் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் என அனைவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைனல் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர்.

இந்த படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடிக்க, மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை இடைவிடாமல் நடத்தி 3 மாதங்களில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஹன்சிகா இயக்குனர் கண்ணனுடன் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

From Around the web