நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் டும்டும்டும்..!! 

 
1

இந்தி டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜயோடு வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை,  ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன் என பல படங்களில் நடித்தார்.

ஹன்சிகா பார்ப்பதற்கு குஷ்பு போலவே கொழு கொழுவென இருந்ததால் ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பு என்று அன்போடு அழைப்பதுண்டு. தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.

1 

இந்நிலையில் சிம்புடனான காதல் தோல்விக்கு பிறகு திருமணம் குறித்து மெளனம் காத்து வந்த ஹன்சிகா, பெற்றோர் வற்புறுத்தலின் காரணமாக திருமணத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.கடந்த 2020-ல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அது லாபகரமாக நடக்கிறது. சோகேலை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்தை டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளப்போகும் ஹன்சிகாவுக்கு திரை உலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

From Around the web