அலறி அடித்துக்கொண்டு தெருவிற்கு ஓடி வந்த நடிகை கனகா!!

 
1

‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனகா. அதனைத் தொடர்ந்து அதிசிய பிறவி, கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சாமுண்டி, கோயில் காளை, சக்கரை தேவன், விரலுக்கேத்த வீக்கம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Kanaka

இவர் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், சரத்குமார், மம்முட்டி உள்பட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்பட பல மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 1-வது மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கனகா வீட்டில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து கனகா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்புப்படை வீரர்கள் உடனடியாக வீட்டில் துணிகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

Kanaka

இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றும் போது தீப்பிடித்து, துணிகளில் தீ பரவியது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

From Around the web