கணவர் மறைவு குறித்து நடிகை மீனா போட்ட எமோஷனல் பதிவு..!!

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. 2000 களின் முற்பகுதியில் முன்னணி மூத்த கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் ஜூலை 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகரை மணந்தார்.
திருமணத்தைத் தொடர்ந்து சிறிது இடைவெளிக்குப் பிறகு, அவர் தொழில்துறைக்குத் திரும்பினார்.சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை மீனாவிற்கு கடந்த மாதம் பெரிய இழப்பு ஏற்பட்டது, அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் கடந்த பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மரணமடைந்தார்.
இந்நிலையில் தற்போது மீனா வழக்கை பற்றி பேசி ஒரு பதிவை போட்டிருக்கிறார். அவரது இளம் வயது போட்டோக்களை பதிவிட்டு ‘வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் . அதை வாழுங்கள். இந்த நேரம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது’ என மீனா குறிப்பிட்டு இருக்கிறார்.