நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி ?

 
1

 நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் கடந்த 9-ம் தேதி பதிவிட்டார்.  ஆனால் நயன்தாரா  கருவுற்றிருந்தது போன்ற எந்த தகவலும் முன்னதாக வெளியாகவில்லை.  ஆகையால்  வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்று தகவல் வெளியானது.  

ஒரு தம்பதி திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து தான் வாடகைத் தாய் மூலம்  குழந்தை பெறும் முறையை மேற்கொள்ள முடியும். அத்துடன்  கர்ப்பப்பை குறைபாடு, கரு கலைவது போன்ற மருத்துவக் காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகைத் தாயை நாட முடியும். மேலும்,  வாடகைத் தாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், திருமணம் முடிந்த 4 மாதத்தில் குழந்தைகள் பிறந்துள்ளதால், திருமணத்துக்கு முன்பே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர், வாடகைத் தாயை நாடினரா, விதிமுறைகளை மீறி நடந்துள்ளனரா என பல சர்ச்சைகள் எழுந்தன.

அவர்கள் விதிமுறைகளின்படி வாடகைத் தாய்மூலம் குழந்தைகளை பெற்றுள்ளனரா என்று மருத்துவம், ஊரகநலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) மூலம் விசாரிக்கப்படும் என  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.  இதுகுறித்து இந்த தம்பதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் கூறினார்.  இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை குறை மாதத்தில் பிறந்ததாகவும், ஆகையால் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில்  இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  

From Around the web