நானி படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் நடிகை நஸ்ரியா..!!  

 
1

நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும் என குறைந்த படங்களையே நடித்திருந்தாலும் அவரது குறும்பு தனமான நடிப்புகளாலும், கியூட் ரியாக்ஷ்னாலும் ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தவர் நஸ்ரியா. தன் காதலனான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை அவர் சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார்.

அவ்வப்போது சில மலையாளப் படங்களில் வந்து முகம் காட்டிவிட்டுச் சென்றார். அதிலும் டிரான்ஸ் என்ற மலையாளப் படத்தில் தன் கணவருடனே நடித்திருப்பார்.இருந்தாலும் நஸ்ரியாவின் தமிழ் சினிமா கரியர் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டு மறந்த நிலையில் தற்போது ஒரு காமெடி லவ்ஸ்டோரியில் நடித்து கம் பேக் கொடுத்துள்ளார்.

நஸ்ரியா நானியின்  இந்த கம்பேக் படத்தின் பெயர் - அடடா சுந்தரா!. நாளை  20 ஆம் தேதி  காலை 11.07 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இப்படம் ஜூன் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web