பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்தது ஏன் ..?நடிகை பிரகிடா விளக்கம்

 
1

இரவின் நிழல் படத்தில் எதற்காக நிர்வாணமாக நடித்தேன் என்பது குறித்து நடிகை பிரகிடா விளக்கமளித்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், சேலை அணிந்து சென்றால் சரியாக இருக்கிறதா? என பலமுறை சரிசெய்யும் பெண்தான் நான்.

ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்ப புனிதமானது. அதற்கு அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரியவைத்தார். ஆனால், இதை என் பெற்றோர்களிடம் எப்படி சொல்வது என்பது எனக்கு ஒரு பெரிய நெருடலாக இருந்தது.எனது கதாபாத்திரம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறி விட்டு இப்படி ஒரு சீனும் இருக்கு. அது இருந்தால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் என்று என் பெற்றோரிடம் எடுத்துக் கூறி இருந்தார் பார்த்திபன்.

பின் அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் இந்த காட்சி நிச்சயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கவர்ச்சியாகவே இருக்காது. அங்கே புனித மட்டுமே தெரியும். இந்த படம் எனக்கு இத்தனை சீக்கிரம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு” என்றார்.

From Around the web