மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட நடிகை பிரணிதா..!

 
1

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த பிரணிதா கடைசியாக 'புஜ்: தி பிரைட் ஆப் இந்தியா' என்ற படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான 'ஹங்கமா-2' படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். .தமிழில் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்ற மாசிலாமணி, அருள்நிதி நடித்த உதயன், எனக்கு வாய்த்த அடிமைகள் உட்பட திரைப்படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். 

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா கொடுந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் பிரபல தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை பெற்றோர் மற்றும் நெருக்கிய நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்துகொண்டார். இந்த வருட ஆரம்பத்தில் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக தனது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரணிதா.

From Around the web