கைலாசாவிற்கு விசா கிடைத்தால் உடனடியாக சென்று விடுவேன் - நடிகை  பிரியா ஆனந்த்..!! 
 

 
1
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை பிரியா ஆனந்த். இவர், நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேட்டி காணும் நபர் பிரியா ஆனந்திடம் தங்களுக்கு நித்தியானந்தா மீது கிரஷ் உள்ளதா ஏனெனில் நித்தியானந்தா குறித்த மாதத்திற்கு இரண்டு செய்தியாவது சமூக வலைதளங்களில் பகிர்வீர்கள் என கேட்ட போது அதற்கு பிரியா ஆனந்த் இவ்வாறு பதிலளித்தார்.

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், திருமணமானால் பெயரை கூட மாற்றத்தேவையில்லை. இவ்வளவு பேர் அவரை பின்தொடர்கிறார்கள் அப்படியென்றாள் அவரிடம் ஏதோ ஒன்று உள்ளது,மக்களை ஈர்க்கும் தன்மையுடையவர் எனவும் கைலாசாவிற்கு விசா கிடைத்தால் உடனடியாக சென்று விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார், இதனை நெட்டிசன்கள் பகிர்ந்து சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

From Around the web