நடிகை பிரியா பவானி சங்கர் ஹோட்டலில் வேலைக்கு ஆட்கள் தேவை..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘காதல் முதல் கல்யாணம் வரை’ சீரியல் மூலம் பிரபலமானவர். அதன்பிறகு வைபவ் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நடித்தார்.
இதையடுத்து 'குருதியாட்டம்', பொம்மை, 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', ‘யானை’ 'இந்தியன் 2 ' , '10 தல' என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து முடித்துள்ளார்.
பிசியான நடிகையாக திரையுலகில் வலம் வரும் ப்ரியா பவானி சங்கர், சமீபத்தில் பீச் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருந்தார். இது குறித்து குறிப்பிட்டிருந்த அவர், எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிதாக ரெஸ்டாரன்ட் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். அந்த ரெஸ்டாரன்ட்டிற்கு LIAM's Dinner என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வாழ்த்துகளை கூறி வந்த நிலையில், அந்த ஹோட்டலில் பணிபுரிய சமையல்காரர் மற்றும் ஊழியர்கள் வேண்டும்” என்று தற்போது தெரிவித்து இருக்கிறார்.
— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 28, 2023
முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் பீச் ஓரத்தில் புது வீடு வாங்கி இருப்பதை அறிவித்து இருந்தார். அத்துடன் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டார்.