தெலுங்கில் பக்கம் செல்லும் நடிகை ப்ரியா பவானி சங்கர்..!!
நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தற்போது தமிழில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். சீரியலில் நடிகைகளாலும் வெள்ளித் திரையில் ஜொலிக்க முடியும் என்பதை சாதித்துக் காண்பித்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் வெற்றி வாகை சூட்டியுள்ளார்.
தற்போது இவர், 'குருதியாட்டம்', 'பொம்மை', 'ஹாஸ்டல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர 'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவனி சங்கர் . இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயனாக நடிக்கிறார். இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கி வருகிறார். சரண் ராஜ் இசையமைப்பாளராகவும், மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.