கலக்கத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!!

கடந்த 2017-ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ராகுல் ப்ரீத் சிங், ராணா, நவ்தீப் ரவிதேஜா உள்ளிட்ட 12 பிரபலங்கள் சிக்கினர். இதில் ஹவாலா பணம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற வருகிறது. இறுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுல் ஃப்ரீத் சிங், சார்மி, பூரி ஜெகன்நாத் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியது, பணமோசடி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.