ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா..! எந்த படத்தில் தெரியுமா..?

 
1

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.அப்படத்தை தொடர்ந்து ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி என வரிசையாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அணைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.

இந்நிலையில் சுமார் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா. மலையாளத்தில் மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஜன கன மன என்ற திரைப்படத்தில் தான் ஸ்ரீ திவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் கடைசியாக ஸ்ரீதிவ்யா காணப்பட்டார். அப்படத்திற்கு பின் ஸ்ரீ திவ்யா எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் அப்படியே காணாமல் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

1

From Around the web