பொன்னின் செல்வன் பற்றி மனம் விட்டு பேசிய நடிகை த்ரிஷா..!!

 
1

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.  

அப்போது பேசிய நடிகை த்ரிஷா,இன்று மிகப்பெரிய நாள், கொரோனாவுக்கு பின் இதுபோன்ற மிகப்பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். குந்தவை கதாபாத்திரத்தை திரைமுன் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட்டோம். குறிப்பாக பண்டைய காலத்தின் செந்தமிழில் பேச தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், ஷூட்டிங் செல்லும்போது ஈசியாக இருந்தது, அதற்கு முன்பே பல முறை ரிகர்சல் செய்துவிட்டோம். இருப்பினும் சற்று கடினமாக இருந்தது பின்னர் போக போக நான் ஓரளவு மேட்ச் செய்து விட்டேன் என புன்னகையுடன் கூறியுள்ளார் த்ரிஷா.

மேலும், எனக்கு இளவரசியாக நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு, அதனை மணிரத்தினம் சார் நிறைவேற்றியுள்ளார்.குந்தவை, நத்தினி கதாபாத்திர காட்சிகள் பொன்னியின் செல்வன் படத்தில் மிகச்சிறப்பாக இருக்கும். அதில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” எனக் கூறினார்.

From Around the web