சமூகவலைத்தளத்தில் வைரலாகும் நடிகை த்ரிஷாவின் 3ம் வகுப்பு ரிப்போர்ட் கார்டு..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிப் படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகை த்ரிஷா. பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தற்போது பெண் மையக் கதாபாத்திரம் படங்களிலே அதிகம் நடித்து வருகிறார்.
ஜோடி படத்தில் சிம்ரனின் நண்பியாக நடித்திருந்தாலும் அதையடுத்து 2002-ம் ஆண்டு சூர்யா உடன் நடித்த மௌனம் பேசியதே படம் தான் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பின்னர் மனசெல்லாம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதையடுத்து அவருக்கு அசுர வளர்ச்சி தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் அவர் நடித்துவிட்டார்.
கடந்த வருடம் அவர் நடித்த பொன்னியின் செல்வன், சில நாட்களுக்கு முன் அதாவது டிசம்பர் 30ம் தேதி ராங்கி என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது. இதில் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய ஹிட், ராங்கி ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.அடுத்தடுத்து த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் 2., படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ புகைப்படத்தில் இருந்து அவரது சின்ன வயது புகைப்படங்கள் என நிறைய வெளியாகி இருக்கின்றன. அப்படி அவரது 3ம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்டு புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பழைய போட்டோ என்றாலும் அதைப் பார்த்த ரசிகர்கள் த்ரிஷா எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.