லேடி சூப்பர்ஸ்டார் ஆகனும் என்கிற பிளானுடன் அப்படி செய்யவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

 
1

லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்த நயன்தாரா, கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடத்தி வருகிறார். இந்த வரிசையில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

தற்போது இவர் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். இதில் டிரைவர் ஜமுனா திரைப்படம் வரும் நவம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் டிரைவர் ஜமுனா படத்தின் பிரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

1

அப்போது ஐஸ்வர்யா ராஜேஷிடம் நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா என்கிற கேள்வி பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “இதென்ன வம்பா இருக்கு. நான் எதையும் பிளான் பண்ணி பண்ணல. எப்பவுமே லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான். ஹீரோ வேண்டாம்னு நான் முடிவு பண்ணி நடிக்கல. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
இந்த மாதிரியான கதைகள் அமைவதால் தொடர்ந்து அதுபோல் நடித்து வருகிறேன். ஆனால் லேடி சூப்பர்ஸ்டார் ஆகனும் என்கிற பிளானுடன் அப்படி செய்யவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை” என கூறியுள்ளார்.

From Around the web