அஜித் 62 படத்தின் புதிய அப்டேட்..!!
Sun, 22 Jan 2023

‘துணிவு‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்கப் போகிறார் நடிகர் அஜித்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 வாரங்களில் தொடங்க உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை காதல் சம்பந்தப்பட்ட கதைகளையே படமாக்கி வந்துள்ள விக்னேஷ் சிவன் இந்த படத்தில் ஆக்சன் கலந்த ஒரு கதையை படமாக்க போகிறார். இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக தகவல் வெளியானது.
இப்போது இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில், சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பெரும் தொகையாக ரூ.10 கோடியை சம்பளமாக கொடுக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதித்துள்ளதாம். அந்த வகையில் அஜித்தின் 62-வது படம் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தயாராக உள்ளது.