தீ தளபதி பாட்டால் சிம்பு மீது அஜித் ரசிகர்கள் அதிருப்தி?

 
1

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

 நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலு இந்த படத்தின் மூலம், தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

2023 பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்திற்கான புரமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதற்காக சமீபத்தில் வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

1

இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து தீ தளபதி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடல் சூப்பராக வந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் பாராட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

இந்த பாடலுக்கான சிம்புவை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும், அஜித் ரசிகர்கள் சற்று மன வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு தன்னை எப்போதும் ஒரு அஜித் ரசிகராகவே காட்டிக்கொள்ளும் நிலையில், பரம எதிரியாக நினைக்கும் விஜய் படத்திற்கு பாட்டு பாடி, டான்ஸ் ஆடியதை அஜித் ரசிகர்கள் பலர் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

1

இதை பார்த்த நெட்டிசன்கள், அஜித்தும், விஜயுமே தாங்கள் நண்பர்கள் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், அவரது ரசிகர்கள் இன்னும் இப்படி செய்து கொண்டிருக்கிறார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web