55 அடி கட் அவுட் வைத்த அஜித் ரசிகர்கள்..!! 

 
1

பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் வெளியாகிறது.இந்த இரண்டு திரைப்படங்களும் 11ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  இந்த நிலையில் இரண்டு படங்களுக்கான முதல் காட்சி எப்போது என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

புதுச்சேரி பொறுத்தவரை நகர மற்றும் கிராமங்களில் உள்ள 16 திரையரங்குகளிலும் இந்த 2 படங்கள் மட்டுமே வெளியாகின்றன.இதனை ஒட்டி நகரம் மற்றும் கிராமங்கள் முழுவதும் அஜித் - விஜய் பேனர்களை ரசிகர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.

1

ஒவ்வொரு தரப்பும் தங்கள் விருப்ப நாயகர்களை உயர்த்தி பிடிக்கும் வாசகங்கள் இடம் பெறும் வகையில் பேனர்கள் வைத்து வருகின்றனர்.இதில் உச்சகட்டமாக அஜித் ரசிகர்கள் 55 அடி கட் அவுட் நகரப் பகுதியில் வைத்து அசத்தியுள்ளனர்.


 

From Around the web