தனது பெயரை மாற்றிக் கொண்ட அஜித் பட நடிகை..!!

 
1

தமிழில்  புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'விக்ரம் வேதா' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அதன் பின் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' மாதவன் உடன் மாறா படத்தில் நடித்திருப்பார்.தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் அவர் தற்போது பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஆராட்டு படத்தில் நடித்திருந்தார். தமிழில் கலியுகம் மற்றும் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் புதிய படம் ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது பெயரை மாற்றியுள்ளதாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் என் பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என்று மாற்றிக்கொண்டேன். ரமா என்பது என் அம்மாவின் பெயர். இனிமேல் என்னை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என்று எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்திக் கொள்வேன். பொறுத்திருந்து பாருங்கள்." என்று தெரிவித்துள்ளார். 

From Around the web