மீண்டும் அதே நடிகையுடன் ஜோடி போடும் அஜித்..?

 
1

 எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த கூட்டணியில் இரண்டாவது முறையாக, கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் வலிமை வெளியானது.

வலிமை வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், வலிமையை தொடர்ந்து ஏகே 61 படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி உருவானது.

1

துணிவு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், பிக்பாஸ் பாவனி, அமீர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த  படத்தை 2023 பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தில் த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1

இந்நிலையில் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து தற்போது ஐந்தாவது முறையாக அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது.

From Around the web