கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அஜித்..!! 

 
1

எச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்.இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

எப்போதும் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பைக் ரைட் செல்வது அஜித்திற்கு பிடித்தமான ஒன்று. அந்த வகையில் காஷ்மீர், லடாக், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.  எப்போதும் நண்பர்களுடன் பைக் பயணம் செய்யும் அஜித், இந்த முறை தனது படக்குழுவினரை அழைத்து சென்றுள்ளார். இவர்களுடன் மலையாள நடிகையும், படத்தின் ஹீரோயினுமான மஞ்சு வாரியரையும் அழைத்து சென்றுள்ளார் அஜித்.

1

1

இந்நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

1
 

From Around the web