விரைவில் டிவியில் ஒளிபரப்பாகிறது அஜித்தின் வலிமை..!! ப்ரோமோ வீடியோ வெளியீடு 

 
1

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். கார்த்திகேயா, சுமித்ரா, புகழ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 220 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், வரும் மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரும் வகையில், வலிமை படம் ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு “மே மாசம் வெயில் ஓட சேந்து நாங்களும் தெறிக்க விடுறோம்” என அறிவித்துள்ளனர்.


 

From Around the web