மீண்டும் வருகிறார் ஆல்யா மானசா... ஆனால் இந்த முறை விஜய் டிவி அல்ல சன் டிவி-க்கு..!! 

 
1

சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். முதல் சீரியலே டாப் கிரியரில் சென்றதால் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார். 

இதே சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் சன் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிகை ஆல்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த செய்தி ஆல்யா மானசா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் சஞ்சீவ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web