ஒரு மர்மமான கொலையை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த அமலா பால்..!! 'கடாவர்' படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

 
1

மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் கடாவர் திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் ஹரிஸ் உத்தமன், முனீஷ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகரர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஒரு மர்மமான கொலையை  போலீசார் பல கோணங்களில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அப்போது பவித்ரா என்ற தடையவியல் நிபுணர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலாபால், கொலைக்காரன் யார், எதற்காக கொலை செய்யப்பட்டது என்பதை கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. 

அமலா பால் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் உள்ளிட்ட 8 மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்போது கடாவர் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் இந்தப் படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

From Around the web