திருச்சிற்றம்பலம் படத்தின் அசத்தலான நியூ கிலிம்ப்ஸ் டீசர்..!!

யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், தனுஷை வைத்து குட்டி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது.
சில தினங்களுக்கு முன் தாய் கிழவி என்ற பர்ஸ்ட் சிங்கிளை வழங்கியுள்ளது. இந்த பாடல் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தாய் கிழவி வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் இப்போது இரண்டாவது பாடலுடன் தயாராக உள்ளனர், இன்று ஜூலை 15, வெள்ளிக்கிழமை வெளியாகிறது
திருச்சிற்றம்பலத்தில் இருந்து வரும் இரண்டாவது சிங்கிள் ‘மேகம் கருக்காத’ என்று அழைக்கப்படுகிறது. இதில் இருக்கும் கூடுதல் அம்சம் தனுஷ் பாடல் வரிகளை எழுதி பாடலையும் பாடியுள்ளார், இது அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும்.இந்த பாடலின் ஒரு சிறிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
#Thiruchitrambalam second single #MeghamKarukkatha releasing on July 15@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @AlwaysJani @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/e8nIDJ1Uaw
— Sun Pictures (@sunpictures) July 13, 2022