60 லட்சத்தில் அமிதாப் பச்சன் சிலை... அசத்திய இந்திய அமெரிக்க ரசிகர்!!

 
1

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி ஷேத், 1990-ல் இன்டர்நெட் செக்யூரிட்டி இன்ஜினியராக அமெரிக்கா வந்தார். நியூ ஜெர்ஸி மாகாணத்தில், எடிசனில் குடும்பத்துடன் வசிக்கிறார். ‘லிட்டில் இந்தியா’ என அழைக்கப்படும் அளவுக்கு இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரமாகும். அமிதாபின் மிகத் தீவிர ரசிகரான கோபி பல ஆண்டுகளாக அமிதாப் குறித்த இணையதளத்தையும் நடத்தி வருகிறார். கோபி மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் அனைவருமே அமிதாபின் ரசிகர்கள்தான்.

Edison

இந்நிலையில், இந்த இந்தியத் தம்பதியினர் தங்கள் வீட்டில் அமிதாப் பச்சனுக்கு சிலை வைத்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளனர். இந்த சிலையை நிறுவ சுமார் 75 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் மொத்தம் 60 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய கோபி, “சிலை வைக்கும் விவரம் அமிதாப் ஜிக்குத் தெரியும். ‘சிலை வைத்தெல்லாம் கெளரவப்படுத்தும் அளவுக்கு நான் ஒன்றும் செய்துவிடவில்லை’ என்று அமிதாப் ஜி சொன்னார். எனினும், சிலை வைக்கும் முயற்சியை அவர் தடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Edison

மேலும், “எனக்கும் என் மனைவிக்கும் அமிதாப் பச்சன் கடவுள் போல. அவரது ரீல் வாழ்க்கை மட்டுமல்ல, ரியல் வாழ்க்கையும் எங்களை நிறைய ஊக்கப்படுத்தி இருக்கிறது. பொதுவெளியில் அவர் தன்னை எப்படி நிர்வகிக்கிறார், எப்படி வெளிப்படுத்துகிறார், எப்படி மற்றவர்களை அணுகுகிறார் என்பது பற்றி நன்றாக உங்களுக்குத் தெரியும். அவர் மற்ற நட்சத்திரங்களைப் போல் இல்லை. அதனால்தான் எங்கள் வீட்டிற்கு வெளியே அவரது சிலையை வைத்து அவரைக் கெளரவப்படுத்தியுள்ளோம்” என்று கூறினார்.

From Around the web