பிரபல விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து மீண்டும் ஒரு நாயகி மாற்றம் – இனி இவருக்கு பதில் இவர்..!!
 

 
1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை அண்ணன் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் மீனாவின் அப்பா ஜனார்தன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வந்து கதிரின் வீட்டிற்கு செல்கிறார்கள். 

இந்த நிலையில் திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. . இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்கள் மாற்றம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக முல்லை, ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் நிறைய முறை மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மீனாவின் தங்கையாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாறியுள்ளார். அதன்படி ஐஸ்வர்யா தான் அவருக்கு பதில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்புதான் தற்போது வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யாவும் ஏற்கனவே நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.சமீபத்தில் முடிவடைந்த சிப்பிக்குள் முத்து என்ற தொடரிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

11

 

From Around the web