சாதனை மேல் சாதனை படைக்கும் ‘அரபிக் குத்து’ பாடல்..!

 
1

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ராணுவ கமாண்டாவாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நேற்று ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விஜய்க்கே உரித்தான ஸ்டைலிஷான லுக் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் ஹலமதி ஹபி என தொடங்கும் ‘அரபிக் குத்து’  பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 2.5 கோடி பார்வையாளர்களையும், 2.2 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.


 

From Around the web