கே.ஜி.எப் ராக்கி-க்கு அம்மாவாக நடித்த அர்ச்சனா ஜோயிஸ் வயது 27 தான்..!! 

 
1

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப். சாப்டர் 2’ படத்திற்கு இந்திய முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியானது.

ரசிகர்கள் எதிர்பார்த்ததுப் போன்றே, படத்தின் விஷுவல், சண்டைக் காட்சிகள், வசனங்கள், இசை என அனைத்தும் ‘கே.ஜி.எஃப். 2’ படத்தில் மிரட்டலாக இருந்தது. இதனால், இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இந்தப் படத்தில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அர்ச்சனா ஜோயிஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் ராக்கி பாயின் அம்மாவாக நடித்திருப்பவர் அர்ச்சனா ஜோயிஸ். முதல் பாகத்தில் இவரின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.இந்நிலையில், அவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஏனெனில், அர்ச்சனா ஜோயிஸ் மிகவும் இளமையானவர். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இவரா அம்மா வேடத்தில் நடித்தார்?’ என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

மாடர்ன் பெண்ணான அர்ச்சனாவை படத்திற்காக கிராமத்து அம்மாவாக மாற்றியிருக்கிறார்கள். இன்ஸ்டாவில் அர்ச்சனாவின் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுப் போய் உள்ளார்கள். 27 வயதான அர்ச்சனா சிறந்த கதக் நடனக் கலைஞர். பல நாடகங்களில் நடித்தவர். கன்னடத்தில் வந்த மகாதேவி என்ற தொடர் மூலம் பிரபலமானவர். அந்த சீரியலில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கன்னட ரசிகர்களைக் கவர்ந்தவர். 

1

From Around the web