நாங்கள் விவாகரத்து செய்கிறோமா ..? விவாகரத்து சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த நடிகை சினேகா..!! 

 
1

2001 ஆம் ஆண்டு என்னவளே படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சினேகா அதன்பின் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதன்பின் 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் சினேகா பிரசன்னா உடன் இணைந்து நடித்த பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டு, 2012 ஆம் ஆண்டு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

பிறகு அவர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் சினேகா ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் இருந்தனர்.

1

இந்நிலையில் விவாகரத்து வதந்தியை கிளப்பி விட்டவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சினேகா. இவர் தன்னுடைய கணவருடன் ஜோடியாக இருப்பதுடன் கணவருக்கு முத்தம் கொடுப்பது போல் போஸ் கொடுத்திருக்கிறார்.

1

‘நாங்கள் எப்போதுமே பிரியாத இரட்டையர்கள். ஹாப்பி விகெண்டு’ என்றும் அந்தப் புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பிறகு விவாகரத்து குறித்த செய்தி அனைத்தும் பொய் என்று உறுதியாக இருக்கிறது.

From Around the web