நீங்கள் விஜய் தேவரகொண்டா ரசிகரா ? அப்போ உங்களுக்கு காத்திருக்கும் அதிஷ்டம் இதோ ..!!

ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவர் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வழக்கம் வைத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
குழந்தைகளுக்கு சாண்டாகிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, அன்பு பரிசுகளை அள்ளி வழங்குவது போன்று, விஜய்யும் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. எனினும்,
இந்த முறை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், #தேவரசாண்டா, 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடைப்பிடித்து வரும் ஒரு நடைமுறை. இந்த ஆண்டு சிறப்பான ஐடியா ஒன்றை வைத்திருக்கிறேன். உங்களில் (ரசிகர்கள்) 100 பேரை விடுமுறை கொண்டாட்டத்திற்கு சுற்றுலா தலத்துக்கு அனுப்ப போகிறேன். அதற்கான அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்டு விடும். எந்த இடம் என தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
#Deverasanta, a tradition I started 5 years ago. This year I have the nicest idea so far :)
— Vijay Deverakonda (@TheDeverakonda) December 25, 2022
I am going to send 100 of you on an all-expense paid holiday. Help me in choosing the destination. #Deverasanta2022https://t.co/iFl7mj6J6v
அதன் கீழே இந்திய மலை பகுதிகள், இந்திய கடற்கரை பகுதிகள், இந்திய கலாசார சுற்றுலா, இந்தியாவின் பாலைவனம் ஆகிய சுற்றுலாவுக்கான 4 பொதுவான இடங்களை குறிப்பிட்டு உள்ளார். இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்யும்படி, அதற்கான வாய்ப்பையும் ரசிகர்களிடமே விட்டு உள்ளார். இதனால் பரவசமடைந்த அவரது ரசிகர்கள் டுவிட்டரில் லைக்குகளையும், விமர்சனங்களையும் குவித்து வருகின்றனர்.