உங்களுக்கு இந்தி சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா? மகேஷ் பாபு பதில் இது தான்..!! 

 
1
சசி கிரண் இயக்கியிருக்கும் தெலுங்குப் படம் 'மேஜர்'. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இப்படம். நடிகர் அத்வி ஷேஷ் இந்தப் படத்தில் சந்தீப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இந்தி புரமோஷனுக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மகேஷ் பாபுவிடம், உங்களுக்கு இந்தி சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா? எனக் கேட்டதும். "நான் சொல்வதை திமிரான பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

எனக்கு இந்தியில் இருந்து நிறைய அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை. அதனால் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தென்னிந்திய சினிமாவிதுறையில் பணியாற்றவே எனக்கு விருப்பம். இங்கு படங்களில் சிறப்பாக நடித்தால் அது உலகம் முழுக்க சென்றடையும். என்னுடைய நம்பிக்கை நிஜமாவதை நான் இப்போது உணர்கிறேன்" எனக் கூறினார்.

From Around the web