விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை - வெளியான அருள்நிதியின் டைரி பட ட்ரைலர்..!!
Jul 27, 2022, 09:05 IST

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் டைரி படத்தில் நடித்துள்ளார் அருள்நிதி.இந்த படம் பல மர்மங்கள் நிறைந்த புலனாய்வு த்ரில்லராக உருவாகியுள்ளது.
பவித்ரா மாரிமுத்து இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.மாயா,கேம் ஓவர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரான் ஏதன் யோஹன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் வி.ஜெ.ஷாரா, ஜெயப்பிரகாஷ், ‘ஆடுகளம்’ கிஷோர், சாம்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேஜாவு படத்தை அடுத்து இந்தப் படத்திலும் அருள்நிதி போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது