விரைவில் ஒடிடியில் வெளியாகிறது ஆர்யாவின் ‘கேப்டன்’..!!

 
1

டெடி படத்திற்கு பிறகு சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன்’. இந்த படத்தில் ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரான மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படத்தை வித்தியாசமான கோணங்களில் இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் ஏலியன் சர்வைவல் திரில்லர் படமாக உருவான கேப்டன் படம் ரசிகர்களிடையே கலவையான விமார்சனங்கள் பெற்றன. 

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ஜி5 இணையத்தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவான இப்படம் கடந்த 8-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

1

From Around the web