ஜோக்கர் படத்தில் அசத்திய தமிழ் நடிகருக்கு 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ்' விருது..!!

 
1

ஆசிய அகாடமி கிரியேட்டிவ் விருதுகள் 2022ன் வெற்றியாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 16 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் போட்டியிட்டன.

இதில் பாசில் ஜோசப் இயக்கத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்த மின்னல் முரளி மலையாளப் படத்தில் நடித்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த நடிகர் குரு சோமசுந்தரம் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். விருது பெற்றது குறித்து குரு சோமசுந்தரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இரண்டு தேசிய விருதுகள் உட்பட 12க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட சூப்பர்ஹிட் தமிழ்த் திரைப்படமான ஜோக்கர் திரைப்படத்தில் மன்னர் மன்னன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக அறியப்பட்ட குரு சோமசுந்தரம், மின்னல் முரளி படத்தில் ஷிபுவாக நடித்து அசத்தி இருப்பார். 

வரும் டிசம்பரில் சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் குரு சோமசுந்தரம் விருதைப் பெறுகிறார்.

From Around the web