அடேங்கப்பா..!! ’அவதார் 2’ படத்தின் வசூல் இவ்வளவா ?
Sat, 31 Dec 2022

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், அவதார் 2 வெளியான 12 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ.10,100 கோடியையும் இந்தியாவில் ரூ.330 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வசூலைக் குவித்துவரும் அவதார் 2 ரூ.15,000 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.