அடேங்கப்பா..!! உலகளவில் லெஜெண்ட் படம் செய்த மொத்த வசூல் இத்தனை கோடியா! 

 
1

லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான படம் 'தி லெஜண்ட்' கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றார். தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியானது.

1

எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என  கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது . ஒரு  எளிய மருந்தியல் விஞ்ஞானி தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளனர்.
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

1

இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாயை திரையரங்க டிக்கெட் விற்பனை மூலம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியால் லெஜண்ட் சரவணன், படக்குழுவினர் மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். 

மேலும், இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை மற்றும் ஒடிடி உரிமைக்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடையும் தருவாயில் உள்ளது. சேட்டிலைட் உரிமை 20 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

From Around the web