திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து அப்பாவாகிறார் அட்லி!! குவியும் வாழ்த்துகள்!!
பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லி. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘முகப்புத்தகம்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.
அதன் பிறகு, தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் படமான ‘ஜவான்’ அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதனிடையே சீரியல் நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அட்லி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமாகி சரியாக 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது அட்லி தனது மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் அட்லி அறிவித்துள்ளார்.
Happy to announce that we are pregnant need all your blessing and love ❤️❤️
— atlee (@Atlee_dir) December 16, 2022
Wit love
Atlee & @priyaatlee
Pc by @mommyshotsbyamrita pic.twitter.com/9br2K6ts77
அவரது பதிவில், “சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம். இப்படிக்கு அன்புடன் அட்லி மற்றும் பிரியா” என்று குறிப்பிட்டுள்ளார். புகைப்படங்களையும் அவர் பதிவு செய்த நிலையில் அட்லி-ப்ரியா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.