தொழிலதிபரின் அட்ரோசிட்டி..!! மாதம் ரூ.25 லட்சம் சம்பளம் என் மனைவியா வர்றியானு நடிகையை கேட்ட தொழில் அதிபர்..!!

 
1

விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை, ஜெயம் ரவியின் ஆதிபகவன், சேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நீது சந்திரா. 

அவர் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. நீத்து கூறுகையில், என்னுடைய கதை ஒரு வெற்றி பெற்ற நடிகையின் தோல்வியடைந்த கதை. ஒரு பெரிய தொழிலதிபர் என்னிடம் வந்து, மாதம் ரூ. 25 லட்சம் தருகிறேன், என் மனைவியாக இருக்கிறீர்களா என கேட்டார்.தற்போது என்னிடம் பணமோ, பட வாய்ப்போ இல்லை.
இதை நினைத்து கவலையாக இருக்கிறது. நிறைய படங்களில் நடித்தும் நான் தேவையில்லாதவள் போன்று உணர்கிறேன்.

ஒரு பிரபல இயக்குனர், அவருடைய பெயரை வெளியிட நான் விரும்பவில்லை. ஆடிசனுக்கு என்னை கூப்பிட்டு விட்டு ஒரு மணிநேரத்தில் நிராகரித்து விட்டார். என்னை நிராகரிப்பதற்காகவே அவர் ஆடிசனுக்கு அழைத்து உள்ளார்.

அதனால், எனது நம்பிக்கை உடைந்து போகட்டும் என்ற நோக்கில் அவர் அப்படி செய்துள்ளார் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார். 

From Around the web