வீரம் பட நடிகரை கொல்ல முயற்சி..? போலீசில் பரபரப்பு புகார்!!

 
1

2003-ம் ஆண்டு வெளியான ‘அன்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பாலா. அதனைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவரால் நிலைக்க முடியவில்லை. இதையடுத்து மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய பாலாவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளும் வாய்ப்புகளும் குவிந்தன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

Bala

இந்ந நிலையில், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார் பாலா. அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். 2012-ம் ஆண்டு அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். அடுத்து டாக்டர் எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

 இந்நிலையில் தனது வீட்டுக்குள், 3 பேர் கும்பல் அத்துமீறி நுழைய முயன்றதாக கொச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாலா கூறியதாவது, நிகழ்ச்சி ஒன்றுக்காகக் கோட்டயம் சென்றிந்தேன். வீட்டில் எலிசபெத் தனியாக இருந்தார். அப்போது கஞ்சா போதையில் வந்த 3 பேர், கதவைத் தட்டி அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். பக்கத்து வீட்டிலும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முகம் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.அவர்கள் கார் எண்ணையும் போலீஸில் கொடுத்துள்ளேன்.

Bala

நானும் மனைவியும் நடைபயிற்சி சென்றபோது, எங்கள் காலில், சில நாட்களுக்கு முன் 2 பேர் விழுந்தனர். அவர்கள்தான் இந்தத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் என்னை கொல்ல வந்துள்ளனர். நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து பெண்ணிடம் வீரம் காட்டுவதுதான் ஆண்மையா? எலிசபெத் மருத்துவர். அவர் பயத்தில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

From Around the web