அவன் நாய் களவாணி சார்... வெளியான வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரைலர் ..!!
Dec 2, 2022, 07:05 IST
நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சினிமா துறைக்கு வரவைத்த படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி , ஷிவானி நாராயணன்,மாறன், மனோபாலா, ‘லொள்ளு சபா’ சேசு, ராமர், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கடந்த மாதம் 14-ம் தேதி சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு குரலில் வெளியான ‘அப்பத்தா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.