தளபதி விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..!!
Thu, 5 May 2022

பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் 66வது படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஏப்ரல் 8ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து வருகிற பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில்,வருகிற ஜூன் 22ம் தேதி விஜய்க்கு 48வது பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் விஜய் 66வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.