யோகிபாபு படத்திற்கு விருது..!! குவியும் பாராட்டுக்கள் 

 
1

சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்துக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு அறிவிப்பு

சிறந்த இயக்குநர் - அய்யப்பன் கோஷியும் படத்துக்காக மறைந்த இயக்குநர் சசிதானந்தனுக்கு அறிவிப்பு

சிறந்த அறிமுக இயக்குநர் - மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு

சிறந்த வசனம் பிரிவில் மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு

இயக்குநர் வசந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 2 தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களுக்கு உகந்த மாநிலம் - மத்தியப்பிரதேசம் அறிவிப்பு
திரைப்படங்கள் தொடர்பான சிறந்த புத்தகமாக அனுப் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகம் தேர்வு
சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று)
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரை போற்று)
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று)
சிறந்த திரைக்கதை - சூரரை போற்று
சிறந்த இயக்குநர் - மறைந்த இயக்குநர் சசிதானந்தன் (அய்யப்பன் கோஷியும்)
 

From Around the web